ஐபிஎல் போட்டியில் விதிமுறையை மீறியதற்காக லக்னெள கேப்டன் கே.எல் ராகுலுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நவி மும்பையில் நேற்று நடைபெற்ற லக்னெள அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 96 ரன்கள் எடுத்தார். பிறகு பேட்டிங் செய்த லக்னெள அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றி பெற்ற ஆர்சிபி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல், ஸ்டாய்னிஸ் ஆகிய இருவரும் ஐபிஎல் விதிமுறையை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கே.எல். ராகுலுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டாய்னிஸுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஹேசில்வுட் பந்தில் போல்ட் ஆன ஸ்டாய்னிஸ், கோபத்தில் நடுவர் பக்கம் திரும்பி கோபத்துடன் பேசியபடி ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இதன் காரணமாக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.: கங்கை விரைவுச் சாலையை ஏப். 29-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா்

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


