

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லால், விரைவில் 2-வது திருமணம் செய்யவுள்ளார்.
66 வயது அருண் லால் இந்திய அணிக்காக 1982 முதல் 1989 வரை 16 டெஸ்டுகள், 13 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தற்போது பெங்கால் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு 13 வருடங்கள் கழித்து ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்கு பெங்கால் தகுதி பெற்றது. தற்போது, ரஞ்சி கோப்பை காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் அருண் லால் விரைவில் 2-வது திருமணம் செய்யவுள்ளார். நீண்டநாளாகக் காதலித்து வரும் 38 வயது புல் புல் சஹாவை மே 2 அன்று திருமணம் செய்யவுள்ளார். திருமண அழைப்பிதழும் அருண் லாலும் புல் புல் சஹாவும் பங்கேற்ற திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகளின் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ரீணாவை முதலில் திருமணம் செய்த அருண் லால் பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டார். எனினும் ரீணாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவருடன் இணைந்து அருண் லால் வாழ்ந்து வருகிறார். ரீணாவின் சம்மதத்துடன் 2-வது திருமணம் செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
அருண் லால் - புல் புல் சஹாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. புல் புல், ஆசிரியராகப் பணிபுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.