காமன்வெல்த்: பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளி

பிரிட்டனில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்குதல் வீரர் விகாஷ் தாக்குர் வெள்ளிப் பதக்கம் வென்றார்
விகாஷ் தாக்குர்
விகாஷ் தாக்குர்

பிரிட்டனில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்குதல் வீரர் விகாஷ் தாக்குர் வெள்ளிப் பதக்கம் வென்றார்

96 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட அவர், மொத்தமாக 346 கிலோ (155 கிலோ + 191 கிலோ) எடையைத் தூக்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 

இங்கிலாந்து தலைநகர் பா்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஐந்தாவது நாளான இன்று பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

இதில், இன்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் விகாஷ் தாக்குர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது முதல் முயற்சியில் 155 கிலோவையும், இரண்டாவது முயற்சியில் 191 கிலோ பளுவையும் தூக்கினார். மூன்றாவது முயற்சியில் 198 கிலோ எடையைத் தூக்கும்போது தோல்வியடைந்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தை நழுவவிட்ட அவர், வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஓசியானாவின், சாமோ நாட்டைச் சேர்ந்த டான் ஒபிலோகி 381 கிலோ எடையைத் தூக்கி தக்கப் பதக்கம் வென்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com