காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ்: பதக்கத்தை உறுதி செய்த பவினா படேல்
By DIN | Published On : 05th August 2022 05:39 PM | Last Updated : 05th August 2022 05:39 PM | அ+அ அ- |

பவினா படேல் (கோப்புப் படம்)
காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பவினா படேல். பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அடைந்தார்.
இந்நிலையில் பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பாரா டேபிள் டென்னிஸ் பிரிவில் இங்கிலாந்து வீராங்கனை சூ பெய்லியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பவினா படேல். இதன்மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.