சுலபமான எதிரணி: இந்திய ஆடவர் ஹாக்கி அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடுமா?

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
சுலபமான எதிரணி: இந்திய ஆடவர் ஹாக்கி அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடுமா?

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்ட முடிவில் 4-1 என வேல்ஸை வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது இந்தியா. ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தினார். மற்றொரு கோலை குர்ஜந்த் சிங் அடித்தார். 4 ஆட்டங்களில் மூன்று வெற்றிகள், ஒரு டிரா என 10 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது. 

சனிக்கிழமையன்று நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

ஏ குரூப்பில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணி, 9-வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. 4-3 என்கிற வெற்றியால் 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் 2 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தால் அந்த அணி தகுதி பெற்றிருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவிடம் 0-7 எனத் தோற்றது பாகிஸ்தான். இதனால் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தது தென்னாப்பிரிக்கா. 2002 மான்செஸ்டர் காமன்வெல்த் போட்டிகளுக்குப் பிறகு அந்த அணி ஆடவர் ஹாக்கியில் அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது. 

அரையிறுதியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்று சாதனை படைத்தது. இதனால் காமன்வெல்த் போட்டிகளின் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் எஃப்.ஐ.ஹெச். ப்ரோ லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இருமுறை வீழ்த்தியது இந்திய அணி. இதனால் அரையிறுதியில் இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் களமிறங்குவார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com