வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இசை, வாண வேடிக்கைகளுடன் நிறைவு பெற்றது காமன்வெல்த் விளையாட்டு - புகைப்படங்கள்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கையுடன் நிறைவு பெற்றது.

News image

இசை, வாண வேடிக்கைகளுடன் நிறைவு பெற்றது காமன்வெல்த் விளையாட்டு - புகைப்படங்கள்

Updated On :9 ஆகஸ்ட் 2022, 9:29 am

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கையுடன் நிறைவு பெற்றது.

Story image

நிறைவு விழாவில் நடைபெற்ற வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா சரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் ஏந்திச் சென்றனர்.

Story image

காமன்வெல்த்போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் போட்டிகள் நிறைவு பெற்றதாக, இளவரசர் எட்வார் அறிவித்தார்.

Story image

அடுத்த காமன்வெல்த் போட்டிகள் 2026ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் நடைபெறுகிறது. எனவே, அடுத்த காமன்வெல்த் விளையாட்டுக் கொடி நிறைவு விழாவில் விக்டோரியா ஆளுநரிடம் வழங்கப்பட்டது.

Story image

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்து நிறைவு செய்தது.

Story image

ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் கனடா 92 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.