முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

இது எதிர்பார்த்தது தான்: மே.இ. தீவுகள் பயிற்சியாளரின் குற்றச்சாட்டுக்கு ரஸ்ஸல் பதில்

சிம்மன்ஸின் விமர்சனத்துக்குப் பதில் அளித்து இன்ஸ்டகிராமில் பிரபல வீரர் ரஸ்ஸல் கூறியதாவது:

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 4:02 pm IST


தன்னை விமர்சனம் செய்த மேற்கிந்தியத் தீவுகளின் பயிற்சியாளருக்குப் பதிலளித்துள்ளார் பிரபல வீரர் ரஸ்ஸல்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடாமல் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ்.

சமீபத்திய மே.இ. தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை. 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு அவர் இந்தப் பக்கமே திரும்பவில்லை. தற்போது இங்கிலாந்தில் தி ஹன்ட்ரெட் போட்டியில் விளையாடி வருகிறார். நரைன் எப்போது விளையாடுவார் என யாருக்கும் தெரியவில்லை. உடற்தகுதித் தேர்வுகளுக்கு எவின் லூயிஸ், ஒஷானே தாமஸ் வரவில்லை.ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸுக்குக் காயம். தனிப்பட்ட காரணங்களுக்காக ஃபேபியன் ஆலன் விளையாடவில்லை. டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் சரியான வீரர்களைக் களமிறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது மே.இ. தீவுகள் அணி. இந்நிலை பற்றி மே.இ. தீவுகளின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியதாவது:

இது வேதனையாக உள்ளது. எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? உங்கள் நாட்டுக்காக விளையாடுங்கள் என அவர்களிடம் நான் சென்று கெஞ்ச முடியாது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட ஆசைப்பட்டால் அதற்குத் தயாராக இருக்கவேண்டும். காலம் மாறிவிட்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு விளையாடுவதை விடவும் வேறு அணிகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளித்தால் நிலைமையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

சிம்மன்ஸின் விமர்சனத்துக்குப் பதில் அளித்து இன்ஸ்டகிராமில் பிரபல வீரர் ரஸ்ஸல் கூறியதாவது:

இது வரும் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அமைதி காக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.