ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்: உலக சாதனையை நாளை சமன் செய்வாரா தீபக் ஹூடா?

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் உலகச் சாதனையைச் சமன் செய்வதற்கான வாய்ப்பு...
ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்: உலக சாதனையை நாளை சமன் செய்வாரா தீபக் ஹூடா?

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் உலகச் சாதனையைச் சமன் செய்வதற்கான வாய்ப்பு இந்திய வீரர் தீபக் ஹூடாவுக்குக் கிடைத்துள்ளது. 

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 18-ல் தொடங்கும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 22-ல் நிறைவடைகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தீபக் ஹூடா இடம்பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் ஹூடா. சமீபத்தில் டி20 ஆட்டத்தில் சதமும் அடித்தார். இதுவரை 5 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்த 14 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர்களில் ஹூடா தற்போது 2-வது இடத்தில் உள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் அவர் விளையாடி அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்று பெற்றுவிட்டால் உலக சாதனையை அவர் சமன் செய்துவிடுவார். ரொமானியாவின் சாத்விக், அதிகபட்சமாக 15 ஆட்டங்களில் இடம்பெற்று தொடர்ச்சியான வெற்றிகளைக் கண்டுள்ளார். 2-வது ஆட்டத்திலும் இடம்பெற்று வெற்றியில் பங்கேற்றால் புதிய உலக சாதனையை நிகழ்த்துவார் ஹூடா. ஜிம்பாப்வே ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்களிலும் ஹூடா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் (ஆடவர் கிரிக்கெட்)

15 - சாத்விக் (ரொமானியா)
14 - தீபக் ஹூடா (இந்தியா)
13 - டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com