இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்டுகளில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா. முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களைத் தடுமாறச் செய்தார்கள். இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 45 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போப் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் போல்ட் ஆனார். தெ.ஆ. பந்துவீச்சாளர்களில் ரபாடா 5 விக்கெட்டுகளும் நோர்கியா 3 விக்கெட்டுகளும் யான்சென் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
தென்னாப்பிரிக்க அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு எல்கரும் எர்வீயும் 85 ரன்கள் சேர்த்தார்கள். எர்வீ 73 ரன்களிலும் எல்கர் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பிராட், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்க அணி. சமீபகாலமாக பல்வேறு நெருக்கடியான தருணங்களைச் சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, இந்த டெஸ்டில் எப்படி மீண்டு வரப்போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் 2-வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு மேலும் உக்கிரமாக இருந்தது. இங்கிலாந்து அணி 37.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது. அலெக்ஸ் லீஸ், பிராட் அதிகபட்சமாகத் தலா 35 ரன்கள் எடுத்தார்கள். நோர்கியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்களில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. லார்ட்ஸ் டெஸ்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரபாடா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 25 அன்று மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தியா ராமா் கோயில் நன்கொடை வழக்கு: எஸ்ஐடி விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேஜரிவால் கேள்வி

55,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்

விரைவில் மனம் திறந்து பேசுவேன்: அண்ணாமலை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



