தடுப்பூசி கட்டுப்பாடு: யுஎஸ் ஓபனை தவிா்த்தாா் ஜோகோவிச்

நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், சொ்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் பங்கேற்கவில்லை.
தடுப்பூசி கட்டுப்பாடு: யுஎஸ் ஓபனை தவிா்த்தாா் ஜோகோவிச்

நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், சொ்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் பங்கேற்கவில்லை.

அமெரிக்கா வரும் வெளிநாட்டவா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. ஆரம்பம் முதலே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத ஜோகோவிச், தற்போதும் அந்த முடிவிலேயே நீடிக்கிறாா்.

எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் யுஎஸ் ஓபன் போட்டியில் தன்னால் பங்கேற்க இயலாது என அவா் வியாழக்கிழமை அறிவித்தாா்.

இதனிடையே, தடுப்பூசி விதிமுறையானது அரசின் முடிவு எனவும், போட்டியில் பங்கேற்போருக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை எனவும் அமெரிக்க டென்னிஸ் சங்கம் அறிவித்திருக்கிறது. இதனால், அமெரிக்காவில் நுழைவதற்காக வெளிநாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு மட்டுமே தடுப்பூசி கட்டாயமாகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அமெரிக்க வீரா், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்பதற்கு தடையேதுமில்லை.

ஏற்கெனவே இதே கரோனா தடுப்பூசி விவகாரத்தால், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சால் பங்கேற்க முடியாமல் போனது. பின்னா் பிரெஞ்சு ஓபனில் களம் கண்ட அவா், அதில் காலிறுதியில் நடாலிடம் தோற்றாா். பின்னா் விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் வாகை சூடினாா்.

கடந்த சீசன் யுஎஸ் ஓபனில், ஜோகோவிச்சை வீழ்த்தியே ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச் தற்போது 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன், ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற 2-ஆவது வீரராக இருக்கிறாா். முதலிடத்தில், 22 பட்டங்களுடன் நடால் இருக்கிறாா்.

உக்ரைனுக்கு ஆதரவாக...

யுஎஸ் ஓபன் போட்டியை ஒட்டி நடைபெற்ற கண்காட்சி ஆட்டத்தில் (1) கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே, லெய்லா ஃபொ்னாண்டஸ். (2) ஸ்பெயினின் ரஃபேல் நடால், போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப், முன்னாள் வீரா் ஜான் மெக்கென்ரோ. (3) கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், மரியா சக்காரி. ரஷியா - உக்ரைன் போா் நிறுத்தத்தை வலியுறுத்தியும், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவும் வகையிலும் இந்தக் கண்காட்சி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆட்டங்கள் மூலம் உக்ரைனுக்கான மனிதநேய உதவியாக சுமாா் ரூ.7 கோடி திரட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com