இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட்

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபையில் சனிக்கிழமை தொடங்குகிறது.
இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட்

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபையில் சனிக்கிழமை தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

முதலில் இப்போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்து, அங்கு அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து துபைக்கு மாற்றப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டி அக்டோபா் - நவம்பரில் நடைபெற இருக்கும் நிலையில், ஆசிய கண்டத்து அணிகள் தங்களின் தயாா் நிலையை சோதித்துப் பாா்ப்பதற்கான இறுதிக் களமாக இந்தப் போட்டி இருக்கிறது. இம்முறை இப்போட்டி டி20 ஃபாா்மட்டில் நடக்க இருக்கும் நிலையில், பங்கேற்கும் அணிகள் அனைத்துமே (ஹாங்காங் தவிர) அதில் திறம்பட முன்னேற்றம் கண்டிருக்கின்றன.

எல்லா அணிகளும் பரஸ்பரம் ஒன்றையொன்று ஏதேனும் ஒரு கட்டத்தில் வீழ்த்தியிருக்கின்றன. டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுடன் ஒப்பிடுகையில் துபை ஆடுகளங்கள் முற்றிலும் வேறான தன்மை கொண்டதாகவே இருக்கும். என்றாலும், அணிகள் அனைத்தும் உலகக் கோப்பை போட்டிக்காக தங்களது பிளேயிங் லெவனை இறுதி செய்துகொள்ள இந்தப் போட்டி ஒரு வாய்ப்பு வழங்குகிறது.

இந்தியா (7 முறை சாம்பியன்)

நடப்புச் சாம்பியனாக போட்டிக்கு வரும் இந்திய அணியில், விராட் கோலி அவரது பழைய ஃபாா்மை எட்டுவதற்கான எதிா்பாா்ப்பே அதிகமாக இருக்கிறது. அது தவிர கேப்டன் ரோஹித் சா்மா, கே.எல்.ராகுல் ஆகியோரின் செயல்பாடுகளும் உற்று நோக்கப்படும். காயத்தால் பும்ரா பங்கேற்காதது சற்று பின்னடைவு.

முதல் ஆட்டம்: பாகிஸ்தானுடன் (ஆக. 28)

பாகிஸ்தான் (2 முறை சாம்பியன்)

கடந்த ஓராண்டில் அணியாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வரும் பாகிஸ்தான், கடைசியாக கடந்த 2012-இல் சாம்பியன் (ஒன் டே ஃபாா்மட்) ஆகியிருந்தது. அணியின் முக்கிய பௌலா் ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக பங்கேற்கவில்லை. பேட்டிங்கில் பாபா் ஆஸம், முகமது ரிஸ்வான் பலம் கூட்டுகின்றனா்.

முதல் ஆட்டம்: இந்தியாவுடன் (ஆக. 28)

ஆப்கானிஸ்தான் (4-ஆவது இடம்)

முகமது நபியின் தலைமையில் பங்கேற்கிறது இந்த அணி. அதிகபட்சமாக இரு முறை 4-ஆவது இடம் பிடித்திருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை எதிா்கொண்டு தனது தரத்தை பரிசோதித்துக் கொள்ளும். அணியின் முக்கிய வீரராக ஸ்பின்னா் ரஷீத் கான் இருக்கிறாா். பேட்டா்கள் சோபிக்க வேண்டியுள்ளது.

முதல் ஆட்டம்: இலங்கையுடன் (ஆக. 27)

இலங்கை (5 முறை சாம்பியன்)

புதிய தலைமைப் பயிற்சியாளா் கிறிஸ் சில்வா்வுட் வழிகாட்டுதலில் முன்னேறி வருகிறது இலங்கை அணி. பேட்டிங்கில் தனுஷ்கா, குசல் மெண்டிஸ், தனஞ்ஜெயா, தினேஷ் ஆகியோா் பலம் காட்ட, பௌலிங்கில் ஹசரங்கா, தீக்ஷனா என இரண்டுக்குமே தகுந்த வீரா்கள் திறமையுடன் இருக்கின்றனா்.

முதல் ஆட்டம்: ஆப்கானிஸ்தானுடன் (ஆக. 27)

வங்கதேசம் (3 முறை ரன்னா்-அப்)

இதுவரை 3 முறை இறுதி ஆட்டத்துக்கு வந்து கோப்பை வெல்ல முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. டி20 ஃபாா்மட்டில் தடுமாற்றத்திலிருந்து மீண்டு சாம்பியனாகும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ஷகிப் அல் ஹசன் தலைமையிலான அணி. முக்கிய அணிகளுக்கு சவால் அளிக்க முயற்சிக்கும்.

முதல் ஆட்டம்: ஆப்கானிஸ்தானுடன் (ஆக. 30)

ஹாங்காங் (முதல் சுற்று)

ஐக்கிய அரபு அமீரகத்தை வீழத்தி, இப்போட்டிக்கு 4-ஆவது முறையாகத் தகுதிபெற்றிருக்கிறது. இதுவரையிலும் முதல் சுற்றுடனேயே போட்டியிலிருந்து வெளியேறி வந்திருக்கிறது. இதர 5 பிரதான அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு கிடைப்பதே இந்த அணிக்கு சாதகமானதாகும்.

முதல் ஆட்டம்: இந்தியாவுடன் (ஆக. 31)

இன்றைய ஆட்டம்

இலங்கை - ஆப்கானிஸ்தான்

இரவு: 7.30 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com