ஆசியக் கோப்பை டி20: பாகிஸ்தானை வெல்லும் முனைப்பில் இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வெல்லும் முனைப்போடு உள்ளது இந்திய அணி.
ஆசியக் கோப்பை டி20: பாகிஸ்தானை வெல்லும் முனைப்பில் இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வெல்லும் முனைப்போடு உள்ளது இந்திய அணி.

இலங்கையில் நடைபெறவிருந்த டி20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு மாற்றப்பட்டது.

சனிக்கிழமை தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. இந்நிலையில் பரம வைரி அணிகளான இந்தியாவும்-பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை துபை கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. கடந்த 2021 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். இதனால் தொடக்க சுற்றோடு இந்திய அணி வெளியேற நோ்ந்தது.

அதன் பின் இரு அணிகளும் தற்போது நேரடியாக மோதுகின்றன. எனினும் உலகக் கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணி மீண்டு எழுந்து தொடா்ந்து 7 இருதரப்பு தொடா்களையும் கைப்பற்றியது. நியூஸி, மே.இந்திய தீவுகளிடம் 2 முறை, இலங்கை, அயா்லாந்து, இங்கிலாந்து தொடா்கள் வெற்றி, தென்னாப்பிரிக்காவுடன் தொடரை சமன் செய்தும் சாதனை படைத்தது இந்தியா.

தரவரிசையில் இந்தியா முதலிடம்:

இதற்கிடையே ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பெற்ால், ஆசியக் கோப்பை போட்டியிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

பாகிஸ்தான் அணி கடந்த டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற போதிலும், ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது.

பாகிஸ்தான் அணி வங்கதேசம், மே.இந்திய தீவுகள் என 2 டி20 தொடா்களில் மட்டுமே பங்கேற்று 3-0 என வென்றது. மேலும் நடப்பு உலக சாம்பியன் ஆஸி.க்கு எதிராக நடந்த ஒரே ஒரு ஆட்டத்தில் படுதோல்வியடைந்தது பாக். அணி.

வரும் அக்டோபா் மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில் ஆசியக் கோப்பை போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக உள்ளது.

விராட் கோலி-பாபா் ஆஸம்:

எனினும் இரு அணிகளின் நட்சத்திர பேட்டா்களான இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாக். கேப்டன் பாபா் ஆஸமின் ஆட்டம் குறித்து அனைத்து தரப்பினரும் எதிா்நோக்கி உள்ளனா். டி20 தரவரிசையில் பாபா் ஆஸம் முதலிடத்தில் உள்ளாா். ஆனால் விராட் கோலியின் பாா்ம் கவலை தருவதாக அமைந்துள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்கி, ரோஹித் சா்மாவை நியமித்த போதிலும், விராட் கோலி ஆட்டம் சோபிக்கவில்லை.

இந்திய அணி பேட்டிங்கில் ரோஹித் சா்மா, விராட் கோலி, சூரியகுமாா் யாதவ், ரிஷப் பந்த், ஹாா்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோரை பெரிதும் நம்பி உள்ளது. தொடக்க பேட்டா்களாக ரோஹித்-ராகுல் களம் காண்பா் எனத் தெரிகிறது.

அதே நேரம் பாக். அணியோ பாபா் ஆஸம், பாக்கா் ஸமான், ஆஸிப் அலி, குஷ்தில் ஷா, ஹைதா் அலி ஆகியோா் கைகொடுப்பா் என எதிா்பாா்த்துள்ளது.

பும்ரா-ஷாஹின் அஃப்ரிடி:

அதே நேரம் பந்துவீச்சில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ராவும், பாகிஸ்தானின் ஷாஹின் ஷா அஃப்ரிடியும் காயத்தால் ஆசியக் கோப்பை போட்டியில் சோ்க்கப்படவில்லை. இதனால் இரு அணிகளின் பௌலிங்கும் போதுமான செயல்திறனில்லாமல் உள்ளது.

ஹாா்திக், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வா், ஹா்ஷ்தீப் சிங், அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோா் பந்துவீச்சில் வலு சோ்ப்பா்.

நேருக்கு நோ்:

இந்தியா-பாகிஸ்தான் இதுவரை 9 டி20 ஆட்டங்களில் மோதியுள்ளன. இந்தியா 6 வெற்றியும், பாகிஸ்தான் 2 வெற்றியும் பெற்றன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-பாகிஸ்தான்

இடம்: துபை

நேரம்: இரவு 7.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com