இந்தியா வெல்லவில்லை; கிரிக்கெட்தான் வென்றது: கபில்தேவ் 

ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து முன்னாள் இந்திய வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து முன்னாள் இந்திய வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்ட இந்தியா, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அந்த ஆட்டத்தில் முதலில் பௌலிங்கில் 25 ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்த பாண்டியா, பின்னா் பேட்டிங்கில் 17 பந்துகளில் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். 19.4வது பந்தில் சிக்ஸா் விளாசி அணியை வெற்றி பெறச் செய்த அவரே ஆட்டநாயகன் ஆனார். 

இந்த போட்டி குறித்து 1983 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது: 

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யாரும் வெல்லவில்லை. கிரிக்கெட்தான் வென்றது. இந்த போட்டி அபாரமாக இருந்தது. என்னைப் பொருத்த வரை இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடியது. வெற்றி பெற்ற அணி அதிக மகிழ்ழ்சியடையும். ஆனால் தோல்வி பெற்ற அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். அதுதான் விளையாட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com