இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை எப்படியிருக்கும்?: செரீனா வில்லியம்ஸ் பதில்!

இந்த முடிவு ஒரு பரிணாம வளர்ச்சி. வாழ்க்கையில் இதர அத்தியாயங்களும் உள்ளன.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 4:44 pm IST

யு.எஸ். ஓபன் போட்டியின் முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆட்டம் முடிந்த பிறகு தன்னுடைய ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை குறித்து அவர் பேசினார். 

2022 யு.எஸ். ஓபன் போட்டி, ஆகஸ்ட் 29-ல் தொடங்கி செப்டம்பர் 11 அன்று நிறைவுபெறுகிறது. இந்நிலையில் விரைவில் ஓய்வு பெறவுள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் டான்கா கோவினிக்கை 6-3, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி 2-ம் சுற்றுக்கு முன்னேறினார். எஸ்டோனியாவின் அனெட் கொண்டாவிட்டை அடுத்தச் சுற்றில் எதிர்கொள்கிறார். 

ஆட்டம் முடிந்த பிறகு ரசிகர்கள் முன்னிலையில் செரீனா வில்லியம்ஸ் பேசியதாவது: 

இந்த முடிவை (ஓய்வு பெறுவது) எடுப்பது கடினமாக இருந்தது. உங்களுக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டால் அதிலிருந்து வெளியேறுவது மிகக்கடினம். இந்த விளையாட்டால் நீங்கள் நல்ல உடற்தகுதியுடனும் இருப்பீர்கள். அது ஒரு போனஸ். இந்த முடிவு ஒரு பரிணாம வளர்ச்சி. வாழ்க்கையில் இதர அத்தியாயங்களும் உள்ளன. எனக்குச் சொந்தமாக நிறுவனங்கள் உள்ளன. பலர் மீது எங்கள் மூதலீடுகளைச் செலுத்தியுள்ளோம். வீட்டில் அதிக நேரம் செலவழிப்பேன். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்துவேன். அது செரீனா 2.0- ஆக இருக்கப் போகிறது. தினமும் காலையில் எழுந்து டென்னிஸ் பயிற்சிக்குச் செல்லவேண்டியதில்லை. ஒரு நல்ல தாயாக இருக்க விரும்புகிறேன். நான் விளையாடும் வரை எனக்கு ஆதரவளியுங்கள் என்றார். 

சமீபத்திய தோல்விகளால் செரீனாவின் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான காத்திருப்பு மீண்டும் தொடர்கிறது. இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார். கடைசியாக, 2017-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். அதன்பிறகு விளையாடிய நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலும் தோல்வியடைந்தார். இந்த வருட விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார். இதன்பிறகு வோக் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், யு.எஸ். ஓபன் போட்டிக்குப் பிறகு டென்னிஸிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்தார்.

Related Article

கூடுதல் சர்வதேச ஆட்டங்கள் தேவை: ரஷித் கான் கோரிக்கை

வங்கதேசத்தையும் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறுமா ஆப்கானிஸ்தான்?

இந்தியா - பாகிஸ்தான்: கடைசி ஓவர்களில் வட்டத்துக்குள் ஐந்து வீரர்கள் இருந்தது ஏன்?

வேதனையுடன் மும்பை அணியை விட்டு விலகும் மூத்த வீரர்!

குகேஷைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் நெ.2 செஸ் வீரராக முன்னேறிய அர்ஜுன்

துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா தொடர்ந்து முன்னிலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.