ஆசியக் கோப்பை: இந்தியா அபார வெற்றி 

ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. 
ஆசியக் கோப்பை: இந்தியா அபார வெற்றி 

ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. 

ஆசியக் கோப்பை டி20யின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்துள்ளது.

கடைசி ஓவரில் 26 ரன்கள் கிடைத்ததன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 44 பந்துகளில் 59 ரன்கள் எடுக்க, சூர்யகுமார் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 26 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். 

அடுத்து ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபர் ஹயட் 41 ரன்களும், கின்சிட் ஷா 30 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப், ஜடேஜா ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டுகளை விழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com