எம்மா ரடுகானு
எம்மா ரடுகானு

யு.எஸ். ஓபன்: முதல் சுற்றிலேயே நடப்பு சாம்பியன் தோல்வி

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்மா ரடுகானு முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளார். 
Published on

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்மா ரடுகானு முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளார். 

கடந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 150-வது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் 18 வயது எம்மா ரடுகானு சாம்பியன் ஆனார். 2004-ல் 17 வயதில் மரியா ஷரபோவா விம்பிள்டன் பட்டத்தை வென்றார். அதன்பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற இளம் வீராங்கனை, தகுதிச்சுற்று வழியாக பிரதான போட்டிக்கு நுழைந்து சாம்பியன் பட்டம் வென்ற முதல் நபர் என்கிற சாதனைகளை யு.எஸ். ஓபன் வெற்றியின் மூலம் படைத்தார் எம்மா ரடுகானு. தரவரிசையில் 127 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.

எனினும் 2022 யு.எஸ். ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்  எம்மா ரடுகானு. பிரான்ஸைச் சேர்ந்த 32 வயது எலிஸ் கார்னட், நடப்பு சாம்பியன் எம்மா ரடுகானுவை 6-3, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் காலிறுதிக்கு நுழைந்த கார்னட், விம்பிள்டனில் உலகின் நெ.1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தினார். தற்போது யு.எஸ். ஓபன் நடப்பு சாம்பியனை வீழ்த்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com