உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற 10 அணிகள்!

நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மெக்ஸிகோ அணியால் அடுத்தச் சுற்றுக்குச் செல்ல முடியவில்லை. 
மெஸ்ஸி
மெஸ்ஸி

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் இரு ஆட்டங்களிலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்தன. அடுத்ததாக நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 4 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்தன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா டென்மார்க்கை 1-0 என வீழ்த்தியது. நடப்பு சாம்பியன் பிரான்ஸை 1-0 என வீழ்த்தி அதிர்ச்சியளித்தது துனிசியா. அடுத்த இரு ஆட்டங்களில் ஆர்ஜென்டீனா போலந்தை 2-0 எனவும் மெக்ஸிகோ சவூதி அரேபியாவை 2-1 எனவும் வீழ்த்தின. போலந்தும் மெக்ஸிகோவும் தலா 4 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் போலந்து அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனால் நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மெக்ஸிகோ அணியால் அடுத்தச் சுற்றுக்குச் செல்ல முடியவில்லை. 

இதையடுத்து ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, போலந்து ஆகிய மூன்று அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குப் புதிதாகத் தகுதியடைந்துள்ளன. 

பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, போலந்து என இதுவரை 10 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. இன்னும் 6 அணிகள் அடுத்த ஆட்டங்களின் முடிவில் தேர்வு செய்யப்படவுள்ளன. 

காலிறுதிக்கு முந்தைய சுற்று டிசம்பர் 3 முதல் தொடங்கவுள்ளது. அன்றைய தினம் அமெரிக்கா - நெதர்லாந்து அணிகளும் ஆர்ஜென்டீனா - ஆஸ்திரேலியா அணிகளும் மோதவுள்ளன. டிசம்பர் 4 அன்று பிரான்ஸ் - போலந்து அணிகளும் இங்கிலாந்து - செனகல் அணிகளும் மோதவுள்ளன. டிசம்பர் 6 வரை இந்தச் சுற்று நடைபெறவுள்ளது. காலிறுதிச் சுற்று டிசம்பர் 9 அன்று தொடங்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com