சதமடித்து மீண்டும் அசத்திய மெஹிதி ஹாசன்: முக்கிய அம்சங்கள்

முதல் ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த மெஹிதி ஹாசன் மிராஸ்...
சதமடித்து மீண்டும் அசத்திய மெஹிதி ஹாசன்: முக்கிய அம்சங்கள்

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேச அணி. 

2-வது ஒருநாள் ஆட்டம் மிர்புரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

வங்கதேச அணி முதல் 6 விக்கெட்டுகளை 69 ரன்களுக்கு 19 ஓவர்களுக்குள் இழந்தது. சிராஜ், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் அருமையாகப் பந்துவீசி வங்கதேச அணியை நிலைகுலைய வைத்தார்கள். 20 ஓவர்களுக்குப் பிறகு தான் இந்திய அணியைக் கடுமையாக வேலை வாங்கினார்கள் மஹ்முதுல்லாவும் மெஹித் ஹாசனும். மஹ்முதுல்லா, 96 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த மெஹிதி ஹாசன் மிராஸ் இன்றும் சிறப்பாக விளையாடி கடைசி ஓவரில் சதத்தை எட்டினார். 83 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார்.

மெஹிதி ஹாசன் சதம்: முக்கிய அம்சங்கள்:

* ஆறு வருடங்களுக்கு வங்கதேசத்தில் யு-19 உலகக் கோப்பை நடைபெற்றபோது தொடர் நாயகன் விருதை வென்றார் மெஹிதி ஹாசன். 

* இன்று தனது முதல் ஒருநாள் சதத்தை எடுத்துள்ளார் 25 வயது மெஹிதி ஹாசன்.

^ 2022-ல் மெஹித் ஹாசன் எடுத்த ரன்கள்

327 ரன்கள், 81.75 சராசரி, 84.49 ஸ்டிரைக் ரேட் 

* ஒருநாள் கிரிக்கெட்டில் நெ.8 வீரராகக் களமிறங்கி சதமடித்தவர்கள்

சிம்ரஜித் சிங் (அயர்லாந்து), vs தெ.ஆ. 2021

 மெஹிதி ஹாசன் (வங்கதேசம்), vs இந்தியா 2022

* ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிக ரன்களை எடுத்த வங்கதேச பேட்டர்கள்

மஹ்முதுல்லா - மெஹிதி ஹாசன்: 165 பந்துகளில் 148 ரன்கள்

* ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த பேட்டர்கள் 

மஹ்முதுல்லா - மெஹிதி ஹாசன்: 165 பந்துகளில் 148 ரன்கள்

* வங்கதேச அணிக்காக 35 டெஸ்டுகள், 66 ஒருநாள், 19 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் மெஹிதி ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com