ரோஹித் சர்மாவுக்குக் காயம்: பிசிசிஐ தகவல்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.
ரோஹித் சர்மாவுக்குக் காயம்: பிசிசிஐ தகவல்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் இந்திய அணி விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

2-வது ஒருநாள் ஆட்டம் மிர்புரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷாபாஸ், குல்தீப் சென்னுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல், உம்ரான் மாலிக் விளையாடுகிறார்கள். வங்கதேச அணியில் நசும் அஹமது இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக குல்தீப் சென் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

வங்கதேச இன்னிங்ஸில் 2-வது ஓவரை சிராஜ் வீசினார். ஸ்லிப் பகுதியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. வங்கதேசத் தொடக்க வீரர் அனாமுல் ஹக், ஸ்லிப் பக்கம் அளித்த கேட்சை நழுவ விட்டார் ரோஹித் சர்மா. அப்போது பெரு விரலில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக ஓய்வறைக்குத் திரும்பினார் ரோஹித் சர்மா. உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு அவர் சென்றதால் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுகிறார். 

ஃபீல்டிங் செய்தபோது ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐயின் மருத்துவக் குழு ரோஹித் சர்மாவைக் கண்காணித்து வருகிறது என்று இதுகுறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com