இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான்ஆட்சியாளா்களால் ஏற்பட்டிருக்கும் நிலையற்ன்மை மற்றும் அச்சுறுத்தலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் தீா்வு கண்டுவரும் சூழலில், கச்சா எண்ணெய் விலை குறைவதை உறுதி செய்யவும், உலகளாவிய நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையிலும் உறுதியான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கில், ஏற்கெனவே கப்பலில் ஏற்றப்பட்ட ரஷிய கச்சா எண்ணெய்யை உலக நாடுகள் வாங்கிக்கொள்ள அமெரிக்க நிதியமைச்சகம் தற்காலிக அனுமதியை வழங்குகிறது.