விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் சாதனைகளை உடைத்த இந்திய அணி

டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 16 வெற்றிகளைக் கண்ட ஆஸ்திரேலியாவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்திய மகளிர் அணி.

ரிச்சா கோஷ்

Published On :

டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 16 வெற்றிகளைக் கண்ட ஆஸ்திரேலியாவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்திய மகளிர் அணி.

நவி மும்பையில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது இந்திய மகளிர் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பெத் மூனி, டஹிலா மெக்ராத் ஆட்டமிழக்காமல் முறையே 82, 70 ரன்கள் எடுத்தார்கள். இந்தக் கடினமான இலக்கை நன்கு விரட்டிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டை செய்தது. இதன்பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துத் தோற்றது. 

இதன்மூலம் 2022-ல் முதல் தோல்வியை எதிர்கொண்டுள்ளது ஆஸ்திரேலிய மகளிர் அணி. மேலும் டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன்பு தொடர்ச்சியாக 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றிப் பயணத்துக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

இதுபோல கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸி. அணி தொடர்ச்சியாகப் பெற்ற 26 வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்திய மகளிர் அணி. தற்போது டி20 கிரிக்கெட்டிலும் அதேபோல ஆஸி. அணியின் சாதனையைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.