ஆர்ஜென்டீனா - குரோசியா அரையிறுதி: முக்கிய அம்சங்கள்

35 வயது மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை என அறியப்படுகிறது.
பயிற்சி பெறும் மெஸ்ஸி
பயிற்சி பெறும் மெஸ்ஸி


கத்தார் உலகக் கோப்பைப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் மூன்று ஆட்டங்களில் எந்த அணி சாம்பியன் ஆகப் போகிறது என்பது தெரிந்து விடும்.

இன்று நடைபெறும் முதல் அரையிறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா - குரோசியா அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் பிரான்ஸும் மொராக்கோவும் நாளை மோதுகின்றன. இரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்குகின்றன. 

* உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவும் குரோசியாவும் இரு முறை மோதியதில் 1998-ல் ஆர்ஜென்டீனா 1-0 என வென்றது. 2018-ல் குரோசியா 3-0 என வென்றது. இரு அணிகளும் முதல்முறையாக நாக் அவுட் சுற்றில் போட்டியிடுகின்றன.

* 2018-ல் 2-ம் இடம் பிடித்தது குரோசியா அணி. இம்முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி என இரு நாக் அவுட் ஆட்டங்களிலும் பெனால்டி வழியாகவே வென்றது. 

* 35 வயது மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை என அறியப்படுகிறது. இதனால் தனது அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தரும் முனைப்பில் அவர் உள்ளார். 

* காலிறுதியில் இரு அணிகளும் பெனால்டி வழியாகவே வெற்றி பெற்றன.

காலிறுதி வெற்றியைக் கொண்டாடும் குரோசிய அணி
காலிறுதி வெற்றியைக் கொண்டாடும் குரோசிய அணி

* உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் குரோசியாவுக்குக் கூடுதல் நேரம் தேவைப்பட்டுள்ளன. முக்கியப் போட்டிகளில் குரோசியா கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களில் 8 ஆட்டங்கள் கூடுதல் நேரம் வரை நீடிக்கப்பட்டன. 

* உலகக் கோப்பையில் விளையாடிய 4 பெனால்டி ஷூட் அவுட்களிலும் குரோசியா வென்றுள்ளது. குரோசியாவும் ஜெர்மனியும் இதுபோன்ற வெற்றியில் ஒரு தோல்வியும் அடையாமல் முதலிடத்தில் உள்ளன. 

* இதுவரை குரோசியா அணி விளையாடிய 1998, 2018, 2022 என 3 காலிறுதி ஆட்டங்களிலும் அந்த அணிக்கு வெற்றிகள் கிடைத்துள்ளன. 

* இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி 4 கோல்கள் அடித்துள்ளார். அனைத்து உலகக் கோப்பைகளிலும் அவர் மொத்தமாக 10 கோல்கள் அடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com