உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணிக்குக் கிடைத்துள்ள சிறிய சலுகை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற பல அணிகள் போட்டியிடுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணிக்குக் கிடைத்துள்ள சிறிய சலுகை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற பல அணிகள் போட்டியிடுகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தோற்றுள்ளதால் இந்திய அணிக்குச் சிறிய சலுகை கிடைத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி தற்போது 4-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டுகளிலும் விளையாடவுள்ளது.

இந்த 6 டெஸ்டுகளிலும் இந்திய அணி வென்றால் 68.06% என வலுவான நிலையில் இருக்கும். இதுவே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற போதுமானதாக இருக்கும். தற்போது 75% வைத்திருக்கும் ஆஸி. அணி இந்தியாவுடன் தோற்றால் கீழே இறங்கிவிடும். 

இந்த 6 டெஸ்டுகளில் ஒரு டெஸ்டில் இந்திய அணி தோற்றாலும் 62.5% இருக்கும். இந்த எண்களை ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தாண்ட முடியாது. ஆனால் 2 டெஸ்டுகளில் தோற்றால் 56.94 % என இறங்கிவிடும். பிறகு மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைக் கொண்டே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியும். 

இங்கிலாந்திடம் தோற்றதால் பாகிஸ்தான் அணியால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: புள்ளிகள் பட்டியல்

1. ஆஸ்திரேலியா - 75%
2. தென்னாப்பிரிக்கா - 60%
3. இலங்கை - 53.33%
4. இந்தியா - 52.08%
5. இங்கிலாந்து - 44.44%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com