இந்த வெற்றிக்கு நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்: கே.எல்.ராகுல்

வங்கதேச அணிக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்ய இந்திய அணி கடுமையாக உழைத்துள்ளதாக இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிக்கு நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்: கே.எல்.ராகுல்

வங்கதேச அணிக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்ய இந்திய அணி கடுமையாக உழைத்துள்ளதாக இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

5ஆம் நாளில் இந்திய வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவையான நிலையில் இன்று காலை எளிதாகவே ஆட்டம் முடிந்தது. ஷகிப் அல் ஹசன் 84 ரன்களுக்கு குல்தீப் சுழல் பந்தில் வீழ்ந்தார். அத்துடன் மற்ற வீரர்களும் சரியத் தொடங்கினர். இந்திய அணி சார்பில் அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும், குல்தீப் 3 விக்கெட்டுகளும், சிராஜ், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வங்கதேச அணிக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்ய இந்திய அணி கடுமையாக உழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெற்றிக்குப் பிறகு கே.எல்.ராகுல் பேசியதாவது: நாங்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைத்துள்ளோம். இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. பேட்ஸ்மென்கள் பெரிய அளவில் சிரமமின்றி விளையாடினர். முதல் 3 நாட்களில் ரன் சேர்ப்பது கடினமாக இருந்தது. வங்கதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் விளையாடிய விதம் எங்களுக்கு சவாலாக அமைந்தது. ஒரு நாள் தொடர் நாங்கள் நினைத்த விதத்தில் அமையவில்லை. அதனால், விளையாட்டில் எங்களது கவனம் தீவிரமாக இருந்தது.

எங்களது அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. அதிலும் குறிப்பாக புஜாரா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. நாங்கள் முதல் இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடினோம். இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா மற்றும் கில் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.

இந்திய அணியில் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தனர். ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சரியாக அமைந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களது அபார பந்துவீச்சு எங்களை ஆட்டத்துக்குள் மீண்டும் எடுத்து வந்து வெற்றியை வசமாக்க உதவியது. அவர்களது பந்துவீச்சு தரத்தினை நிரூபித்துள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com