ரோஹித் சர்மாவை சந்திக்க வேண்டும்: வேகம் காட்டும் மும்பை இந்தியன்ஸ் புதிய பயிற்சியாளர்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை சந்திக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மாவை சந்திக்க வேண்டும்: வேகம் காட்டும் மும்பை இந்தியன்ஸ் புதிய பயிற்சியாளர்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை சந்திக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித்திடம் தனது பயிற்சி நுட்பங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ், ஐஎல்டி20யில் விளையாடும் எம்ஐ எமிரேட்ஸ், எஸ்ஏ 20யில் விளையாடும் எம்ஐ கேப் டவுன் ஆகிய மூன்று டி20 அணிகளின் செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக ஜெயவர்தனே செயல்படவுள்ளார். இதனையடுத்து, அவருக்குப் பதிலாக அவரது தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் தனது பயிற்சி நுட்பங்கள் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை சந்தித்து ஆலோசிக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து மும்பை இந்தியன்ஸின் இணையதளப் பக்கத்தில் அவர் கூறியதாவது: இந்தியாவின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக செயல்படும் ரோஹித் சர்மா ஒரு அற்புதமான வீரர். அவர் ஒரு சிறந்த தலைவர். அவரது தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் புள்ளிப் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்தது. ரோஹித் சர்மாவுடன் இணைந்து பயணிப்பது சுவாரசியமானதாக இருக்கப் போகிறது. இதற்கு முன் ரோஹித் சர்மாவுக்கு எதிராக விளையாடியுள்ளேன். அவர் மிகச் சிறந்த ஆட்டக்காரர். அவருடன் இணைந்து பயணிப்பதை எதிர்நோக்கியுள்ளேன். 

எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. ரோஹித் சர்மாவுக்கு உரையாடுவது பிடிக்கும் என எனக்குத் தெரியும். அதனால் அவருடன் உரையாடுவதும் சுவாரசியமாக இருக்கப் போகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com