தடுப்பூசி வேண்டாம், பட்டங்களை இழக்கத் தயார்: ஜோகோவிச்
By DIN | Published On : 15th February 2022 06:02 PM | Last Updated : 15th February 2022 06:04 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்குப் பதில் எதிர்காலத்தில் பட்டங்களை இழக்கத் தயார் என செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாததால், ஜோகோவிச்சால் கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியவில்லை. அந்த நாட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
இதையும் படிக்க | டு பிளெஸ்சிஸ்ஸை கேப்டனாக அறிவிக்கவுள்ளதா ஆர்சிபி?
பிபிசி ஊடகத்திடம் அவர் பேசுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது குறித்து விளக்கமளித்துள்ளார். கரோனா தடுப்பூசி விஷயத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு காரணமாக எதிர்காலத்தில் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்சு ஓபன் போன்ற தொடர்களில் பங்கேற்பதைத் தியாகம் செய்யத் தயாரா என அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஜோகோவிச், "ஆம், அதற்கான விலையைக் கொடுக்கத் தயார்" என்று பதிலளித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "நான் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு எதிரானவன் அல்ல. குழந்தையாக இருந்தபோது நானும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளேன். ஆனால், நம் உடலில் என்ன செலுத்திக் கொள்கிறோம் என்பதைத் தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தை எப்போதும் ஆதரிப்பவன்.
பட்டங்கள், மற்ற விஷயங்களைக் காட்டிலும் என் உடல் குறித்த முடிவுகள் மிக முக்கியமானது" என்றார்.
நோவக் ஜோகோவிச் இந்த மாதம் துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடவுள்ளார்.