16 வயது தமிழக செஸ் வீரரைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்த 16 வயது தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்த 16 வயது தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனை எதிர்கொண்டார் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. இந்தப் போட்டியில் இதற்கு முன்பு தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்றிருந்தார் கார்ல்சன். ஆனால், பிரக்ஞானந்தா, ஏழு சுற்றுகளில் விளையாடி ஒரு வெற்றி, நான்கு தோல்விகள், இரண்டு டிராக்கள் எனச் சுமாராகவே விளையாடியிருந்தார். கடைசி மூன்று ஆட்டங்களிலும் அவருக்குத் தோல்விகளே கிடைத்தன. 

எனினும் கார்ல்சனுக்கு எதிராக கருப்பு நிறக் காய்களுடன் அற்புதமாக விளையாடி 39 நகர்த்தல்களில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா. கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்றுள்ள முதல் வெற்றி இது.

உலகின் நெ.1 வீரர் கார்ல்சனைத் தோற்கடித்ததால் பல பிரபலங்களும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். பிரபல கிரிக்கெட் விரர் சச்சின் டெண்டுல்கர், ட்விட்டரில் கூறியதாவது:

பிரக்ஞானந்தாவுக்கு இப்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இந்த 16 வயதில் - அனுபவம் மிக்க, கொண்டாடப்படும் கார்ல்சனை அதுவும் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடி தோற்கடிப்பது என்பது மகத்தானது. செஸ் விளையாட்டில் சாதிக்க வாழ்த்துகள். இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்றார்.

இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள்.  ஒவ்வொரு வெற்றிக்கும் மூன்று புள்ளிகளும் டிராவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com