உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

இந்திய மகளிர் அணிக்குப் புதிய துணை கேப்டன்

இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

தீப்தி சர்மா

Published On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST

இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20, 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய மகளிர் அணி. டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 62 ரன்கள் வித்தியாசத்திலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தையும் வென்றது நியூசிலாந்து அணி. 3-வது ஒருநாள் ஆட்டத்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. 

இன்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து. 4-வது ஒருநாள் ஆட்டம் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. இந்திய அணி, 17.5 ஓவர்களில் 128 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டன. மந்தனா இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார். மேக்னா, ஹர்மன்ப்ரீத் கெளர், டானியா பாட்டியா, ஜுலான் கோஸ்வாமி, ஏக்தா பிஸ்ட் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ளவர் ஹர்மன்ப்ரீத் கெளர். இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடாததால் இத்தொடரின் 4 மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக தீப்தி சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்திய டி20 அணியில் ஸ்மிருதி மந்தனா, துணை கேப்டனாக உள்ளார். 2021-ல் ஹர்மன்ப்ரீத் கெளர் விளையாடாதபோது ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட், ஒருநாள் தொடருக்கு மந்தனா, துணை கேப்டனாகப் பணியாற்றினார். இன்றைய ஆட்டத்தில் மந்தனா இடம்பெற்றபோதும் தீப்தி சர்மாவுக்குத் துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.