அணியில் புஜாரா, ரஹானே இடம்: என்ன சொல்கிறார் கோலி?
By DIN | Published On : 14th January 2022 09:25 PM | Last Updated : 14th January 2022 09:25 PM | அ+அ அ- |

இந்திய அணியில் சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் அஜின்க்யா ரஹானேவின் இடம் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்காத கேப்டன் விராட் கோலி பேட்டிங்கே தோல்விக்குக் காரணம் என்பது போல கருத்து தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது.
இந்த நிலையில் கேப்டன் விராட் கோலி இதுபற்றி பேசுகையில், "கடந்த இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் பேட்டிங் கைகொடுக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் இங்கிருந்து கூற முடியாது (புஜாரா மற்றும் ரஹானே குறித்து).
இதையும் படிக்க | இந்தியா தோல்வி: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
நான் முன்பு கூறியதுதான். மீண்டும் கூறுகிறேன். கடந்த காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா மற்றும் ரஹானே சாதித்தைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தோம். தென் ஆப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இருவரும் முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதுபோன்ற ஆட்டங்களையே நாங்கள் அங்கீகரிப்போம். ஆனால், தேர்வுக் குழுவினர் மனதில் என்ன இருக்கிறது, அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது பற்றி நான் இங்கிருந்து கூற முடியாது" என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...