
இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் கேப் டவுனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களும் எடுத்தன. 13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 212 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 4-ம் நாள் உணவு இடைவேளையில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. ராசி வான்டர் டூசன் 22 ரன்களுடனும், தெம்பா பவுமா 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையும் படிக்க | வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா: இன்னும் 41 ரன்கள் மட்டுமே தேவை
இடைவேளைக்குப் பிறகு டூசனும், பவுமாவும் விக்கெட்டை இழக்காமல் வெற்றி இலக்கை அடையச் செய்தனர். 63.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் மூலம் வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டூசன் 41 ரன்களும், பவுமா 32 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.