வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா: இன்னும் 41 ரன்கள் மட்டுமே தேவை

இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் உணவு இடைவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா: இன்னும் 41 ரன்கள் மட்டுமே தேவை


இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் உணவு இடைவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3-வது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களும் எடுத்தன.

13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 198 ரன்களுக்கு ஆட்டமிழந்து தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 212 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

3-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தன.

இந்த நிலையில் 4-ம் நாள் ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. 48 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடங்கிய கீகன் பீட்டர்சன் அரைசதம் கடந்தார். ராசி வான்டர் டூசனும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து பாட்னர்ஷிப் அமைத்தார்.

இந்த இணை விக்கெட்டை இழக்காமல் ரன்களைக் குவிக்க இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்துகொண்டே இருந்தது.

பீட்டர்சன் 82 ரன்கள் எடுத்திருந்தபோது ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டூசனுடன் இணைந்து தெம்பா பவுமாவும் நிதானம் காட்டத் தொடங்கினார்.

4-ம் நாள் உணவு இடைவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

டூசன் 22 ரன்களுடனும், பவுமா 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு இன்னும் 41 ரன்கள் தேவைப்படுகின்றன. இந்திய வெற்றிக்கு 7 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com