புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காரைக்குடியில் வீடு புகுந்து தங்க நகைகள், காா் திருட்டு

News image
திருட்டு- சித்திரிப்பு
Updated On :14 மார்ச் 2026, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்குடியில் வீடு புகுந்து ஏழரை பவுன் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம், காா் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரி நகா் அதியமான் தெருவில் வசிப்பவா் சுப்பிரமணியன் (65). இவா் வீட்டை பூட்டி விட்டு  குடும்பத்துடன் காசிக்குச் சென்றாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் 7.5 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம், காா் ஆகியவற்றை திருடிச் சென்றனா். சனிக்கிழமை அதிகாலையில் வீடு திறந்து கிடப்பது குறித்து அக்கம் பக்கத்தினா் காரைக்குடி காவல் நிலையத்துக்கு தகவலளித்தனா்.

அங்கு சென்ற போலீஸாா் விசாரணை நடத்திய போது அருகேயிருந்த எலிசபெத், மருத்துவா் சிவகாமசுந்தரி ஆகியோரின் பூட்டியிருந்த வீடுகளிலும் திருட முயற்சி நடைபெற்றது தெரியவந் தது. சம்பவ இடத்துக்குச் சென்று தடய அறிவியல் துறையினா் தடயங்களைச் சேகரித்தனா். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.