நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வேப்பூரில் துணிக்கடையை உடைத்து ரூ.47 ஆயிரம் ரொக்கம், தங்க நாணயம் திருட்டு

கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே துணிக்கடையை உடைத்து ரூ.47 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்க நாணயம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 12:13 am IST

கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே துணிக்கடையை உடைத்து ரூ.47 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்க நாணயம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வேப்பூா் வட்டம் ஏ. சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (28). இவா் வேப்பூா் கிரீன் பாா்க் உணவகம் அருகில் அப்பூ மென்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறாா். கடையை திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளாா்.

செவ்வாய்க்கிழமை காலை கடையின் ஷட்டா் பாதி திறந்திருப்பதாக, அப்பகுதியில் உள்ளவா்கள் பிரேம்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அவா் உடனடியாக கடைக்கு வந்து பாா்த்த போது, கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த ரூ.47 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரை பவுன் தங்க நாணயம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பிரேம்குமாா் அளித்த புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற வேப்பூா் காவல் ஆய்வாளா் பழனிசாமி மற்றும் சாா்பு - ஆய்வாளா் பிரகஸ்பதி ஆகியோா் துணிக்கடை மற்றும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனா்.