சேனா நாடுகளில் கேப்டன் கோலியின் சாதனை என்ன?

சேனா நாடுகளில் விராட் கோலி பெற்ற வெற்றிகள் 
சேனா நாடுகளில் கேப்டன் கோலியின் சாதனை என்ன?

டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகினார். அதன் விளைவாக ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து அவரை நீக்கியது பிசிசிஐ.

இப்போது யாரும் எதிர்பாராதவிதமாக டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்தான கேப்டனாகப் புகழப்படும் விராட் கோலி, வெளிநாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்றதால் கூடுதல் மதிப்பைப் பெற்றார். சேனா நாடுகள் (SENA - South Africa, England, New Zealand and Australia) என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற ஒரே ஆசிய கேப்டன் - விராட் கோலி. 

* வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் விராட் கோலி - 16 வெற்றிகள். (அடுத்த இடத்தில் கங்குலி - 11 வெற்றிகள்). 2018-19-ல் ஆஸ்திரேலியாவில் கோலி தலைமையில் 2-1 என வென்றது இந்தியா. மேற்கிந்தியத் தீவுகள் அணியை 2-0 என இருமுறை தோற்கடித்தது. 2017-ல் இலங்கையை 3-0 என வென்றது. கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது. மீதமுள்ள ஒரு டெஸ்ட் இந்த வருடம் நடைபெறவுள்ளது. 

* ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் - விராட் கோலி. 

* சேனா நாடுகளில் 7 வெற்றிகளைப் பெற்றுள்ளார் விராட் கோலி. இதர இந்திய கேப்டன்களில் தோனியும் பட்டோடியும் தலா 3 வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். சேனா நாடுகளில் விளையாடிய 24 டெஸ்டுகளில் 7 வெற்றிகளும் 14 தோல்விகளும் 3 டிராக்களும் கோலிக்குக் கிடைத்துள்ளன. (சேனா நாடுகளில் 23 டெஸ்டில் விளையாடிய தோனிக்கு 3 வெற்றிகள் மட்டுமே கிடைத்தன. 14 தோல்விகள், 6 டிராக்கள்.) சேனா நாடுகளில் கோலிக்கு அடுத்ததாக அதிக வெற்றிகளைப் பெற்ற ஆசிய கேப்டன்கள் - வாசிம் அக்ரம், மியாண்டட். இருவருக்கும் தலா 4 வெற்றிகள் கிடைத்துள்ளன. 

* சேனா நாடுகளில் விராட் கோலி பெற்ற வெற்றிகள் 

இங்கிலாந்து - 10 டெஸ்டுகள் - 3 வெற்றிகள் - 6 தோல்விகள் - 1 டிரா
ஆஸ்திரேலியா - 7 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 3 தோல்விகள் - 2 டிரா
தென்னாப்பிரிக்கா - 5 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 3 தோல்விகள் 
நியூசிலாந்து - 2 டெஸ்டுகள் - 0 வெற்றி - 2 தோல்விகள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com