தோல்வியடைந்தது ஏன்: கேப்டன் கே.எல். ராகுல்

நடு ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்கத் தவறிவிட்டோம் என இந்திய ஒருநாள் அணி கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்தது ஏன்: கேப்டன் கே.எல். ராகுல்

நடு ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்கத் தவறிவிட்டோம் என இந்திய ஒருநாள் அணி கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பாா்ல் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் அடித்தது. பவுமா 110, வான் டொ் டுசென் 129* ரன்கள் எடுத்தார்கள். பின்னா் ஆடிய இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்களே அடித்தது. தவன் 79, கோலி 51 ரன்கள் எடுத்தார்கள். வான் டொ் டுசென் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்திய அணியின் தோல்வி பற்றி கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்ததாவது:

நல்ல ஆட்டம். நிறைய கற்றுக்கொள்ள இருந்தது. நாங்கள் நன்றாக ஆரம்பித்தோம். நடு ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியவில்லை. இனிமேல் நடு ஓவர்களில் விக்கெட் எடுத்து எதிரணி ரன்கள் குவிப்பதைக் கட்டுப்படுத்த பார்ப்போம். எங்கள் அணியின் நடுவரிசை வீரர்களால் ரன்கள் எடுக்க முடியவில்லை. முதல் 20-25 ஓவர்களில் நன்கு ரன்கள் எடுத்தோம். இதனால் இலக்கை எளிதாக விரட்டி விடுவோம் என நினைத்தேன். ஆனால் தெ.ஆ. அணி சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தார்கள். பந்துவீச்சில் கூடுதலாக 20 ரன்கள் கொடுத்துவிட்டோம். நடு ஓவர்களில் நல்ல கூட்டணி எங்களுக்கு அமையவில்லை. தவறுகளில் இருந்து நிறைய கற்றுக்கொள்வோம் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com