கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மே.இ. தீவுகள் டி20 தொடர்: இங்கிலாந்து கேப்டன் மார்கன் விலகல்

இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கனுக்குக் காயம் ஏற்பட்டதால்  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2022, 5:44 am

DIN

இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கனுக்குக் காயம் ஏற்பட்டதால்  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். 

இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 23 முதல் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது. 

முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் மே.இ. தீவுகள் அணி 2-1 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் காலில் காயம் ஏற்பட்டதால் 3-வது டி20 ஆட்டத்தில் விளையாடாத இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன், மீதமுள்ள இரு டி20 ஆட்டங்களில் இருந்தும் விலகியுள்ளார். அந்த ஆட்டங்கள் ஜனவரி 29, ஜனவரி 30 தேதிகளில் நடைபெறும். 

3-வது டி20 ஆட்டத்தில் கேப்டனாக இருந்த மொயீன் அலி, மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் விளையாடிய மொயீன் அலியை அந்த அணி தக்கவைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.