முகப்பு விளையாட்டு செய்திகள்
ரஞ்சி கோப்பைப் போட்டி விவகாரம்: ரவிசாஸ்திரி கருத்து
By DIN | Published On : 28th January 2022 01:23 PM | Last Updated : 28th January 2022 01:23 PM | அ+அ அ- |

ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்தாமல் இருந்தால் இந்திய கிரிக்கெட் முதுகெலும்பில்லாததாக ஆகிவிடும் என இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா பரவல் தொடங்கியவுடன் இன்று வரை ரஞ்சி கோப்பைப் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது பிசிசிஐ. எனினும் இம்முறை ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்த உறுதியாக உள்ளது பிசிசிஐ.
இந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டியை இரு பகுதிகளாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. முதல் பகுதியில் லீக் ஆட்டங்களை நடத்திவிடுவோம். நாக் அவுட் ஆட்டங்கள் ஜுனில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஞ்சி கோப்பைப் போட்டி தொடர்பாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. ட்விட்டரில் அவர் கூறியதாவது:
இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக உள்ளது ரஞ்சி கோப்பைப் போட்டி. அதை நாம் உதாசீனப்படுத்த ஆரம்பிக்கும்போது இந்திய கிரிக்கெட் முதுகெலும்பில்லாததாக ஆகிவிடும் எனக் கூறியுள்ளார்.