5-வது டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம்: 3-ம் நாள் ஹைலைட்ஸ் விடியோ

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி 257 ரன்கள் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 
சிராஜ்
சிராஜ்
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி 257 ரன்கள் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இப்போது நடைபெறுகிறது. ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பும்ரா இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுகிறார்.

பிர்மிங்கமில் நடைபெறும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் பும்ரா 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 98/5 என்கிற நிலையில் இருந்த இந்தியா பிறகு ரிஷப் பந்த், ஜடேஜாவின் அற்புத சதங்களாலும் பும்ராவின் கடைசிக்கட்ட அதிரடி ஆட்டத்தினாலும் கெளரவமான ஸ்கோரைப் பெற்றது. 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது.

3-ம் நாளில் இந்திய அணி அபாரமாகப் பந்துவீசியது. பேர்ஸ்டோ நெருக்கடியைச் சமாளித்து சதமடித்தார். அவர் 106 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில்  45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. பும்ரா 50, ரிஷப் பந்த் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 257 ரன்கள் முன்னிலை பெற்று 5-வது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com