இங்கிலாந்து அணியின் விஸ்வரூபத்துக்கு இவரே காரணம்: முன்னாள் கேப்டன் பாராட்டு

இங்கிலாந்து அணியின் வெற்றிகளுக்கு முக்கியக் காரணம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் என...
இங்கிலாந்து அணியின் விஸ்வரூபத்துக்கு இவரே காரணம்: முன்னாள் கேப்டன் பாராட்டு

இங்கிலாந்து அணியின் வெற்றிகளுக்கு முக்கியக் காரணம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் என முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டை வெல்ல உதவினார்கள். 

சமீபகாலமாக இங்கிலாந்து அணிக்குக் கிடைத்துள்ள வெற்றிகள் பற்றி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன் கூறியதாவது:

இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சீர்படுத்த ஸ்டோக்ஸையும் மெக்கல்லமையும் நியமித்தபோது  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ராப் கீ என்ன கூறினார்? பயணத்தை அனுபவியுங்கள் என்றார். அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வெற்றிகளைப் பார்க்க அபாரமாக இருந்தான. 

ஆஷ்லி கைல்ஸ் (நிர்வாக இயக்குநர்), ஜோ ரூட் (கேப்டன்), கிறிஸ் சில்வர்வுட் (பயிற்சியாளர்) ஆகியோரை விடுவித்து மூன்று பேர் புதிதாக நியமிக்கப்பட்டபோது கேள்விகள் எழுந்தன. நிர்வாக இயக்குநராக ராப் கீ நியமிக்கப்பட்டபோது அவருக்கு கிரிக்கெட் நிர்வாகம் பற்றி என்ன தெரியும், இதற்கு முன்பு அந்த வேலையை அவர் செய்ததே இல்லையே எனக் கேட்டார்கள். ஆனால் இதுவரை சரியான முடிவுகளையே அவர் எடுத்துள்ளார். 

இயன் போத்தம், பிளிண்டாஃப் ஆகிய ஆல்ரவுண்டர்கள் கேப்டன் பதவியில் ஜொலிக்காததால் மற்றொரு ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதும் கேள்விகள் எழுந்தன. ஆனால் ஒரு கேப்டனாக அவர் தன்னை நிரூபித்துள்ளார். 

இங்கிலாந்து அணி அச்சம் கொள்ளாமல் களமிங்குவதை மெக்கல்லம் உறுதி செய்துள்ளார். பெரிதாக யோசித்து கவலைப்படாமல் அணி வீரர்கள் விளையாடுகிறார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com