இன்றும் சொதப்பல் ஆட்டம்:  நெருக்கடியில் விராட் கோலி

இன்றும் சொதப்பல் ஆட்டம்: நெருக்கடியில் விராட் கோலி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு அதிக டி20 போட்டிகளில் விளையாடவில்லை. விளையாடிய போட்டிகளிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.  டி20 போட்டிகள் ஆட்டம் மட்டுமல்லாது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறப்பான பார்மில் இல்லை. ஐபிஎல் போட்டிகளிலும் விராட் கோலி பெரிய அளவில் சோபிக்கவில்லை.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவினரால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியின்  பெயர் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மீதான நெருக்கடி அதிகரித்தது. வருகிற அக்டோபர் மாதத்தில் உலகக் கோப்பைத் தொடங்க உள்ளது. இந்த சூழலில் விராட் கோலியின் பேட்டிங் மற்றும் உலகக் கோப்பை டி20 அணியில் இடம் பெறுவரா அல்லது அவரது இடம் இளம் வீரர்கள் யாருக்காவது வழங்கப்படுமா என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இத்தனை விமர்சனங்களும் ஒருபுறமிருக்க, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே விராட் கோலி இன்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் களம் கண்டார். ஆனால், அவர் வந்த வேகத்திலேயே 1 ரன்னில் விக்கெட்டினை பறிகொடுத்து ஏமாற்றமளித்தார். இதன்மூலம் அவர் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் பொய்யாக்கப் பட்டிருக்கிறது. 

உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. இதனால் அவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் சிறந்த ஃபார்மில் பல இளம் வீரர்கள் இருக்கும் நிலையில் இந்திய அணியில் விராட் கோலியின் இடம் பெறுவதில் மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com