ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய அணி: ஆச்சர்யப்பட்ட இங்கிலாந்து பயிற்சியாளர்

அவர்களுடைய ஆட்டத்தில் வெளிப்பட்ட ஆக்ரோஷம் எங்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.
ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய அணி: ஆச்சர்யப்பட்ட இங்கிலாந்து பயிற்சியாளர்


டி20 தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆட்டம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாக இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளர் மேத்யூ மாட் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

நாட்டிங்கமில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. மலான் 77, லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சூர்யகுமார் யாதவ் அற்புதமான ஷாட்களை வெளிப்படுத்தி சதமடித்தார். 55 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டாப்லி 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

டி20 தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தொடர் நாயகன் விருதை புவனேஸ்வர் குமார் வென்றார். 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. 

இங்கிலாந்து அணிக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 4 டி20 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

டி20 தொடரில் இந்திய அணியின் அணுகுமுறை பற்றி இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளர் மேத்யூ மாட் கூறியதாவது:

டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களில் நிறைய பாடங்கள் கிடைத்தன. அதிரடியான மனநிலையுடன் இந்திய அணி விளையாடியது. இதனால் எங்களுக்கு நிறைய அழுத்தம் ஏற்பட்டது. இது நாங்கள் எதிர்பார்த்தது தான். ஆனால் அவர்களுடைய ஆட்டத்தில் வெளிப்பட்ட ஆக்ரோஷம் எங்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. தொடரை இழந்த பிறகு துணிச்சலுடன் விளையாடுவது குறித்து அணி வீரர்களுடன் விவாதித்தோம். டி20 தொடரிலிருந்து கற்றுக்கொண்டதை அடுத்து வரும் தொடர்களில் வெளிப்படுத்துவோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com