கங்குலி, சேவாக்கையே இந்திய அணியிலிருந்து நீக்கினார்கள்: வெங்கடேஷ் பிரசாத்

கங்குலி, சேவாக், யுவ்ராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் சரியாக விளையாடாதபோது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
கங்குலி, சேவாக்கையே இந்திய அணியிலிருந்து நீக்கினார்கள்: வெங்கடேஷ் பிரசாத்

கங்குலி, சேவாக், யுவ்ராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் சரியாக விளையாடாதபோது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சதமடிக்காமல் உள்ள விராட் கோலி, டி20 தொடரில் விளையாடிய இரு ஆட்டங்களிலும் 1,11 எனக் குறைவான ரன்களே எடுத்தார். இந்திய டெஸ்ட் அணியிலிருந்து அஸ்வினை நீக்கமுடியும் என்றால் கோலியையும் நீக்கலாம் என முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் இதேபோல பேசியுள்ளார்கள்.

இந்நிலையில் கோலியின் ஆட்டம் பற்றி முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், ட்விட்டரில் கூறியதாவது:

இதற்கு முன்பு ஒரு வீரர் சரியாக விளையாடாமல் போனால் அவர் எவ்வளவு மதிப்புமிக்கவராக இருந்தாலும் அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள். கங்குலி, சேவாக், யுவ்ராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் சரியாக விளையாடாதபோது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டுக்குச் சென்று நன்றாக விளையாடி ரன்கள் எடுத்து மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார்கள். ஆனால் இந்த அளவுகோல் ஒரேடியாக மாறியுள்ளது. சரியாக விளையாடாவிட்டால் சில ஆட்டங்களில் விளையாடுவதில் இருந்து ஓய்வு அளிக்கப்படுகிறது. இது முன்னேற்றம் அடைவதற்கான வழியே இல்லை.

இந்தியாவில் ஏராளமான திறமைகள் உள்ளன. இதனால் ஒருவரை மதிப்பின் பொருட்டு விளைட வைக்கக் கூடாது. இந்தியாவுக்குப் பல வெற்றிகள் அளித்த அனில் கும்ப்ளேவும் பலமுறை வாய்ப்பில்லாமல் உட்கார வைக்கப்பட்டுள்ளார். ஒரு நல்ல விஷயத்துக்காக சில நடவடிக்கைகள் தேவை. அதேபோல ஹூடா போன்ற சிறப்பான பல வீரர்கள் அமரவைக்கப்படும்போது, இந்திய டி20 அணியில் ஷ்ரேயஸ் அய்யருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியவில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com