கோலியின் பங்களிப்பை மறந்து விடக்கூடாது: ரோஹித் சர்மா

இந்த நிபுணர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. அவர் ஏன் நிபுணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்பதும்...
கோலியின் பங்களிப்பை மறந்து விடக்கூடாது: ரோஹித் சர்மா

கோலியை அணியிலிருந்து நீக்கவேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் முன்னாள் வீரர்களை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விமர்சனம் செய்துள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சதமடிக்காமல் உள்ள விராட் கோலி, டி20 தொடரில் விளையாடிய இரு ஆட்டங்களிலும் 1,11 எனக் குறைவான ரன்களே எடுத்தார். இந்திய டெஸ்ட் அணியிலிருந்து அஸ்வினை நீக்கமுடியும் என்றால் கோலியையும் நீக்கலாம் என முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் இதேபோல பேசியுள்ளார்கள்.

கோலி மீதான முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்ததாவது:

விமர்சனங்களால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. வெளியே என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதையும் நாங்கள் கவனிப்பதில்லை. மேலும் இந்த நிபுணர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. அவர் ஏன் நிபுணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்பதும். 

விமர்சகர்கள் வெளியே இருந்து அணியைப் பார்க்கிறார்கள். அணிக்குள் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. எங்களுக்கென்று ஒரு நடைமுறை உண்டு. அணியைத் தேர்வு செய்து, நிறைய விவாதித்து, அதைப் பற்றி நிறை யோசிக்கிறோம். தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு ஆதரவும் வாய்ப்பும் அளிக்கப்படுகின்றன. வெளியே இருப்பவர்களுக்கு இதைப் பற்றித் தெரியாது. அணிக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் எனக்கு முக்கியம். 

வீரர் (கோலி) விளையாடுவதைப் பற்றி கேட்கிறீர்கள் என்றால் ஒவ்வொருமுறையும் ஒரே மாதிரி இருக்காது. வீரரின் தரம் மோசமாகி விடாது. நாங்கள் அவருக்கு ஆதரவளிக்கிறோம். இந்த நிலை எனக்கும் மற்றவர்களுக்கும் நடந்திருக்கிறது. ஒரு வீரர் தொடர்ந்து நன்றாக விளையாடும்போது ஒன்றிரண்டு தொடர்களில் மோசமாக விளையாடினால் அவருடைய பங்களிப்பை மறந்து விடக் கூடாது. இதைச் சிலர் புரிந்துகொள்ள காலமாகும். எங்களுக்கு வீரரின் முக்கியத்துவம் தெரியும். வெளியே உள்ளவர்களுக்குப் பேச உரிமை உண்டு. ஆனால் எங்களுக்கு அதைப் பற்றிய அக்கறை கிடையாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com