உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு முதல் வெற்றி

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ‘கிளாசிஃபிகேஷன்’ ஆட்டத்தில் இந்தியா ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு முதல் வெற்றி

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ‘கிளாசிஃபிகேஷன்’ ஆட்டத்தில் இந்தியா ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

போட்டியில் 9 முதல் 16 இடங்களைப் பிடிப்பதற்காக அணிகளிடையே நடத்தப்படுவது ‘கிளாசிஃபிகேஷன்’ ஆட்டமாகும். இதில் ஸ்பெயினை திங்கள்கிழமை நள்ளிரவில் சந்தித்தது இந்தியா. ஆட்டத்தில் முதலில் ஸ்பெயினுக்காக மேட்லின் செக்கோ 11-ஆவது நிமிஷத்திலேயே கோலடித்தாா்.

என்றாலும், இந்தியாவின் சலிமா டெடெ 58-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, இறுதியில் ஆட்டம் சமனில் முடிந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க ‘ஷூட் அவுட்’ முறை கையாளப்பட்டது. அதில் ஸ்பெயின் முயற்சிகளை இந்திய கோல்கீப்பா் சவிதா அபாரமாகத் தடுத்து அணிக்கான வெற்றியை உறுதி செய்தாா்.

8 வாய்ப்புகள் வரை சென்ற ஷூட் அவுட்டில் ஸ்பெயின் தரப்பில் 2 கோல்கள் (அமாண்டா வுட்கிராஃப்ட், நடாலி சௌரிசியு) அடிக்கப்பட, இந்தியா 3 கோல்களை (நவ்னீத் கௌா், சோனிகா, நேஹா) எட்டி வென்றது.

இந்திய அணி அடுத்ததாக, 12-ஆவது இடத்துக்கான பிளே-ஆஃபில் ஜப்பானை புதன்கிழமை சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com