புவனேஸ்வரில் நடைபெறும் 48-வது ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.
கலிங்கா அரங்கத்தில் நடைபெறும் போட்டியில் 1500 மீ. ஃப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார் வேதாந்த். இதற்கு முன்பு இதே 1500 மீ. ஃப்ரீஸ்டைல் போட்டியில் 16:06.43 என இருந்த தேசிய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
மாதவனின் மகன் வேதாந்த், மஹாராஷ்டிரத்தின் சார்பாக இப்போட்டியில் பங்கேற்றுள்ளார். வேதாந்தின் இந்த வெற்றியை ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள மாதவன், போட்டியின் காணொளியையும் பகிர்ந்துள்ளார்.
Never say never . National Junior Record for 1500m freestyle broken. @VedaantMadhavan pic.twitter.com/Vx6R2PDfwc
â Ranganathan Madhavan (@ActorMadhavan) July 17, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







