தமிழ்நாடு வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி நாடு முழுவதும் பயணித்து தமிழ்நாடு வந்தடைந்தது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி நாடு முழுவதும் பயணித்து தமிழ்நாடு வந்தடைந்தது. 

தமிழகத்தில் முதன்முறையாக சா்வதேச அளவிலான 44- ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28- ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 

இதில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சா்வதேச சதுரங்க விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

இந்தப் போட்டி குறித்து நாடு முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமா் மோடி தொடக்கிவைத்தார். 

இந்த ஜோதி நாடு முழுவதும் பயணித்து இன்று தமிழ்நாடு வந்தடைந்தது. புதுச்சேரியில் இருந்து கோவை பந்தய சாலைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில்  துவங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டு கொடி வளாகத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராமசந்திரன், முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் 4 மாவட்டங்கள் (கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு) அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர் ம் சுந்தரிடம் அளித்தனர். 

இந்த ஜோதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து கொடிசியா(Hall-D) அரங்கு வரை கொண்டு வரப்பட்டது. இதற்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடிசியா அரங்கிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடிசியா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு துறைகளில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு சாதனைகள் புரிந்த வீரர் வீராங்கனைகள் கெளரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் சிறப்புரையாற்றினர். 

அதனைத் தொடர்ந்து பரதம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தற்காப்பு கலை நிகழ்ச்சிகள், மேற்கத்திய நடன நிகழ்ச்சிகல்  நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அதிவிரைவு சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. இதில் பத்து மாணவர்களுடன் கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர் சதுரங்கம் விளையாடினார். இதில் செஸ் கேக் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து  16 மாவட்ட பிரதிநிதிகளிடம் மாதிரி ஜோதிகள் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து கோவைக்கு கொண்டு வர ஒலிம்பியாட் ஜோதி கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தரிடம் வழங்கப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மேயர் கல்பனா ஆனந்த்குமார், செஸ் கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர் உள்பட செஸ் ஒலிம்பியாட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் இந்நிகழ்வை காண்பதற்கு கோவை மாவட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் 2000க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டனர்.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்ததையொட்டி கோவை பந்தய சாலை முதல் கொடிசியா வரை மாரத்தான் நடக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com