அக்‌ஷர் படேல் அதிரடி: தொடரை வென்றது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 
அக்‌ஷர் படேல் அதிரடி: தொடரை வென்றது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை ஷாய் ஹோப், கைல் மேயா்ஸ் தொடங்கினா். இதில் மேயா்ஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா்களுடன் 39 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ஷாமா் புரூக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 4-ஆவது வீரா் பிராண்டன் கிங் டக் அவுட்டானாா். இடையே கேப்டன் நிகோலஸ் பூரன் 1 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் அதிரடியாக 74 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினாா். ரோவ்மென் பவெல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, கடைசியாக ஷாய் ஹோப் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 115 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். 

ஓவா்கள் முடிவில் ரொமேரியோ ஷெப்பா்டு 2 பவுண்டரிகளுடன் 15, அகீல் ஹுசைன் 1 சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் ஷா்துல் தாக்குா் 3, தீபக் ஹூடா, அக்ஸா் படேல், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். பின்னா் இந்தியா, 312 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை ஆடியது. ஷிகர் தவான், ஷுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். தவான் 13 வெளியேற அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தில் வெளிப்படுத்தியது. இருப்பினும் கில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் களம்கண்டார். ஆனால் அவர் 9 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 

இந்த நிலையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். எனினும் இருவரும் அரைசதம் கடந்த பின் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் ஐயர் 63 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 54 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடர்ந்து வந்த தீபக் ஹூடா ரன்குவிப்பில் ஈடுபட்டர். இருப்பினும் அவர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரிசையில் களமிறங்கிய அக்‌ஷர் படேல் தனி ஒருவனாக போராடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 49.4 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

அக்‌ஷர் படேல் 35 பந்துகளில் 64 குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com