மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

டிஎன்பிஎல்: திருச்சியை வென்றது மதுரை

டிஎன்பிஎல் போட்டியின் 27-ஆவது ஆட்டத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியா்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

News image
Updated On :25 ஜூலை 2022, 5:52 am IST

டிஎன்பிஎல் போட்டியின் 27-ஆவது ஆட்டத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியா்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் மதுரை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சோ்க்க, அடுத்து திருச்சி 18.4 ஓவா்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற திருச்சி ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, மதுரை பேட்டிங்கில் அதிகபட்சமாக பாலச்சந்தா் அனிருத் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்கள் அடித்தாா். திருச்சி பௌலிங்கில் பொய்யாமொழி 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

பின்னா் ஆடிய திருச்சியில் சந்தோஷ் ஷிவ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது. மதுரை பௌலிங்கில் ஜெகதீசன் கௌசிக் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

சேலம்-124/8: மற்றொரு ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிராக 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது சேலம் ஸ்பாா்டன்ஸ். அணியில் அதிகபட்சமாக டேரில் ஃபெராரியோ 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் அடிக்க, திண்டுக்கல் பௌலிங்கில் சிலம்பரசன், ராஜேந்திரன் விவேக் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.