/

அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ்! அடுத்தடுத்து வெளியான பட அறிவிப்புகள்!

அஜித் குமாரின் ரேஸிங் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

News image

கிளாடியேட்டர்ஸ்

Updated On :34 வினாடிகள் முன்பு

அஜித் குமாரின் ரேஸிங் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அடுத்தப் பட அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இடையில் கார் ரேஸிங், தயாரிப்பாளர் கிடைக்காதது போன்ற காரணங்களால் ஏகே-64 பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தன.

இந்த நிலையில், இன்று மாலை பல மாதக் காத்திருப்புக்குப் பின்னர் ரசிகர்களுக்கு விருந்தாக அஜித்தின் 64-வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இப்படத்திற்கு ’டேர் டெவில்’ (Dare devil) எனப் பெயரிட்டுள்ளனர். முதல்முறையாக அஜித்தின் மனைவி ஷாலினி இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

தயாரிப்பு நிறுவனத்திற்கு பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்‌ஷன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளனர்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையைப் மையப்படுத்திய படத்தின் அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ‘கிளாடியேட்டர்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது அவரது ரேஸிங் பற்றிய ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தையும் ஷாலினியே தயாரிக்கின்றார்.

அஜித்தின் அடுத்தடுத்த பட அறிவிப்புகளால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Summary

Ajith Kumar's Gladiators! A series of film announcements!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.