நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆனால், குட் பேட் அக்லி வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஏகே - 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருப்பதால் உண்மையில் யார்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்? என்கிற கேள்விகளும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
குட் பேட் அக்லி போன்ற நல்ல வெற்றிப் படத்தைக் கொடுத்தும் ஏன் இன்னும் அடுத்த அறிவிப்பு வரவில்லை என்றும் அஜித் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஏகே - 64 அறிவிப்பை ஆகஸ்ட் மாதம் வெளியிடத் தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
New information has emerged regarding the announcement of actor Ajith Kumar's 64th film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











